தமிழர் குடி

மறவர்குடி மலிந்தபடி மடிந்துபோவதெப்படி
தடையை அடி படையை அடி ஏறு நீ படிப்படி
தடைகள் தகர்த்து படைகள் உடைத்து
துணிவாய் முடித்து முன்னேறு
தமிழர்குடி மறவரடி மறவரடி தமிழர்குடி

தங்கத்தமிழெங்கள் உயிராக வேண்டும்
உயிர்போனபோதும் தமிழ்வாழ வேண்டும்

பார் பார் விழித்துப்பார் – உன்
வாழ் நிலையை நினைத்துப் பார்
யார் யார் அடைத்ததார் – உன்
மனதைக் கூண்டில் அடைத்ததார்
தமிழை மறுத்து மறைத்து வாழும் வாழ்வில் பயனே இல்லை – உன்
சொந்த இனத்தை மறைக்கப்போனா மனுசன் நீயும் இல்லை
கண்டதுக்கும் வளைஞ்சு கொடுக்க தமிழன் தண்ணி இல்லை – என்றும்
குப்பை வாழ்க்கை வாழ நீயும் சேத்துப் பண்ணி இல்லை
செந்தமிழா எழுந்து வா செந்தமிழைக் காக்க வா
தமிழர் குடி மறவரடி மறவர் குடி தமிழரடி

மறவர்குடி மலிந்தபடி மடிந்துபோவதெப்படி
தடையை அடி படையை அடி ஏறு நீ படிப்படி
தடைகள் தகர்த்து படைகள் உடைத்து
துணிவாய் முடித்து முன்னேறு
தமிழர்குடி மறவரடி மறவரடி தமிழர்குடி

தங்கத்தமிழெங்கள் உயிராக வேண்டும்
உயிர்போனபோதும் தமிழ்வாழ வேண்டும்
அன்னைத் தமிழெங்கள் உயிர் மூச்சு
அந்தத்தமிழ போயின் உயிர் போச்சு

மறவர்குடி மலிந்தபடி மடிந்துபோவதெப்படி
தடையை அடி படையை அடி ஏறு நீ படிப்படி

குனிந்து குனிந்து நடந்ததால கூன் விழுந்து போச்சு – நீ
தமிழை மறந்து திரிந்ததால தமிழ் மலிந்து போச்சு
உலகம் எல்லாம் பரவியுள்ளான் தமிழன் என்று பேச்சு – அட
அங்கும் இங்கும் பரவிக்கிடந்து என்ன கிழிச்சாச்சு
பிரதேசவாத குப்பைகளை மறந்தெழுடா தம்பி
நாம் சேர்ந்தெழுந்து முழங்கி நிண்டா எப்பகையும் தும்பி
மந்திரத்தால் மாங்காய் விழும் என்று நீயும் வாழாதே – உன்
தந்திரத்தால் வீழ்த்தி விடு ஆண்டவனைக் கேளாதே

Comments are closed.