பகை
எம்மை சரிக்க நினைக்கும் உன்தன் கதை முடிக்கும்
வரைக்கும் துளியும் இல்லை எங்கள் கண்ணில் உறக்கம்
நெருங்கி நெருங்கி வந்து – செத்துப் போ
பதுங்கி பதுங்கி வந்து – பட்டுப் போ
அடிக்கும் அடியினிலே உன்தன் கதி கலங்கும்
தப்பிப்போ தப்பிப்போ என்று உள்ளே மனம் புலம்பும்
சுருட்டி எடுத்துக் கொண்டு இன்றே விட்டுப்போ – இல்லை
சுருண்டு விழுந்தபடி நாளை செத்துப் போ
எல்லையை நீ கடக்கிறாய் – நிறுத்து இன்று
பகையை நீ வளர்க்கிறாய் முறிப்போம் நின்று
அமைதியாய் இருப்பது பயத்தால் அன்று
அடக்க நாம் நினைக்கையில் புரியும் அன்று
இடியாய் படையெடுக்க உனக்குள்ளே எரியும்
எளிதாய் கதை முடிக்க உனக்கது புரியும்
அழகாய் அகன்று விடு நிம்மதியும் தெரியும்
தொடர்ந்து நிமிர்ந்து நின்றால் உன்தன் உயிர் பிரியும்
உனக்கேன் உனக்கேன் பகையும் உனக்கேன்
தலைக்கேன் தலைக்கேன் கனமும் தலைக்கேன்
விளக்கேன் விளக்கேன் அதை நீ விளக்கேன்
உனக்கேன் உனக்கேன் பகையும் உனக்கேன்
எங்கே வந்து பார் எம்மில் முட்டிமோதிப் பார்
எங்கே வந்து பார் எம்மில் முட்டிமோதிப் பார்
உனக்கேன் உனக்கேன் பகையும் உனக்கேன்
தலைக்கேன் தலைக்கேன் கனமும் தலைக்கேன்
தொலைக் துடைக்க இல்லை நாம் புழுதி
பொறுக்கப் பொறுக்க கொதிக்கும் குருதி
துடிக்கத் துடிக்க முறிப்போம் பிளிறி
அழித்துத் தொலைக்க எடுத்தோம் உறுதி
வெட்டக் குணம் கொண்டோம் எட்ட நீ போ
கொட்டத் திடம் கொண்டால் செத்து நீ போ
முட்டும் மனம் கொண்டோம் விட்டு நீ போ – என்றும்
வெற்றிப் படை என்றே வீழ்த்தி நிற்போம்


