பூமறாங்

பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!

மெல்லத் தமிழினிச் சாகும் எனக்கேட்டேன் – சொன்ன
பிறவிக்கு கையால் ரெண்டு போட்டேன்
மெல்லத்தமிழிங்கி னிச்சாகுமே பாரீர்
வெல்லத்துளிபோல் சுவைக்கத்தானே போறீர்

பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!

எப்போதும் எதுகொண்டும் தமிழ் தன்னை அடித்தாலும்
ஆனா முதற் கொண்டு அகேனத்தை அழித்தாலும்
ஆரம்பம் முதற்கொண்டு அடிவரை நாம் போவோம்
பூகம்பம் வரக்கூடும் முயன்றே பின் நாம் சாவோம்
பகைவரின் சூட்சிக்கு பதறாது எங்கள் கை
தமிழ்தன்னின் வீழ்ச்சிக்கு இடங்கொடா தெங்கள் கை
முயற்சி என்றொண்டிங்கு உள்ளவரை மூச்சிருக்கும்
அயர்ச்சியே கிடையாது எள்ளளவே பேச்சிருக்கும்
இலட்சியப் பாதை எங்கும் முழுவேக வீச்சிருக்கும்
தமிழ் தின்ன வந்தவரை செந்தமிழர் மூச்செரிக்கும்
தமிழ் காக்க வந்தவர் நாம் என்றும் எங்கள் பேச்சிருக்கும்
தடுத்தாள வந்தவர்கள் நெஞ்சம் தன்னில் மூச்சிழுக்கும்

பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
தமிழெங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழெங்கள் வளமிக்க உளமுற்ற தீ

பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!

தமிழ் எங்கள் மூச்சு உயிர் மூச்சு
அது எங்கள் பேச்சு உயிர் பேச்சு
தமிழ் எங்கள் வீச்சு வாள் வீச்சு
தமிழ் நின்று போச்சு உயிர் போச்சு
எதுவந்தபோதும் தமிழ் மோதும்
இடர் வந்தபோது மனம் மோதும்
தமிழுக்காய் மோதும் இது மோதும்

பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!

தமிழ்குத் தடியெடுத்தால் எமக்குப் பிடிக்காது
தமிழைப் பலியெடுத்தால் எமக்குப் பிடிக்காது
தமிழில் படையெடுத்தால் எமக்குப் பிடிக்காது
தொடர்ந்தால் அவர்க்கு என்றும் நிம்மதி இருக்காது

பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!

தமிழர்தனைக் நாம் காக்க வருவோம் என்றும் புறப்பட்டு
நிறுத்த இங்கு முடியாது யாரும் நம்மை தடைபோட்டு
சேர்ந்தே இன்று எழுவோம் நாம் எழுந்து நீயும் கொடிகட்டு
இனிமேல் இங்கு கிடையாது தமிழில் என்றும் விளையாட்டு

Comments are closed.