பூவரசம் பூ

பூவரசம் பூவே நீதான் என்
ஜீவரசம் என்றும் நான் நாடும்
தேன் கலசம் ஆடலாம் பெண்ணே
நாம் சரசம் ஓடிவா கண்ணே

என்னத்தைச் சொல்லி நான் என்னத்தைச் செய்ய
காதலைக் கடையில சொல்லவா செய்ய
பழம் நழுவிப் பாலில் விழும் எண்டு பாத்தா
பழம் விழாமப் பாலும் பழம் பாலாப் போச்சா
இது என்ன ஞாயம் துன்பம் என்னில்ப் பாயும்
இன்பம் மெல்லச்சாயும் மனசெல்லாம் காயம்
என்னத்தைச் சொல்லி நான் என்னத்தைச் செய்ய
காதலைக் கடையில சொல்லவா செய்ய

என்னைத் தெரியாதோ அன்பு புரியாதோ
இதயம் கிடையாதோ உணர்வு தெளியாதோ
கண்ணே நில்லடி கண்கள் பாரடி
காதல் சொல்லடி இல்லை கொல்லடி
நீயில்லா வாழ்க்கை தீ தின்னல் போன்றது
நிம்மதி இன்றிங்கு வாழ்வை யார் வென்றது
பெண்ணே என்னைப் பார் கண்கள் தன்னைப் பார்
கண்ணில் கசிந்தோடும் துன்பம் தன்னைப் பார்

பூவரசம் பூவே நீதான் என்
ஜீவரசம் என்றும் நான் நாடும்…

பாறைக்குள் நான் இங்கேன் நீரைத் தேடினேன்
அவளுக்குள் வீணாக என்னைத் தேடினேன்
இன்பம் துள்ள வாழும் அவளைப் பார்க்கிறேன்
அல்லல் பட்டு வீழும் என்னை வேர்க்கிறேன்
மனமே மரத்துப்போ அவளைத் தொலைத்துப்போ
விழியில் நீர் போதும் வேண்டாம் இனி ஏதும்
வாழ்வில் அலைமோதும் காலம் இனி மாறும்
யாவும் சரியாகும் வாழ்வு புதிதாகும்

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வாழ்வில் புதிதில்லை தொல்லை இனியில்லை
வலியது வருவதும் மீண்டது போவதும்
என்றும் புதிதில்லை வாழ்வு வேறில்லை
இன்பம் முன்னர் வரும் துன்பம் பின்னர் வரும்
துன்பம்; முன்னர் வரும் இன்பம் பின்னர் வரும்
வாழ்வை வாழுவேன் வாழ்வை வெல்லுவேன்
தொல்லை இனியில்லை தோற்பும் இனியில்லை

Comments are closed.