யார்க்கும் குடியல்லோம்
யாவும் நாம் எழு வீழும்
சூளும் பகைக்கினி ஓலம்
வீரம் பொழிய வா ஈனம் அழிய வா
தீரம் உடையவா தீர்க்கம் ஆக வா
இனியும் பொறுமை இல்லை பகையே எட்டப்போ
இல்லை என்று போனால் இன்றே செத்துப்போ
குட்டக்குனியும் கும்பல் எண்ணம் விட்டுப்போ
வெட்டிக்குடை சாய்க்க முன்னர் தப்பிப்போ
பொறுத்துப் பூமி ஆளும் எண்ணம் இல்லை – பகை
வறுத்துப் பூமி ஆள்வோம் இல்லை இனித் தொல்லை
சாகத்துணிந்தோர்க்கு சமுத்திரம் எம்மட்டு
சூளும் பகையெல்லாம் போகுமே உடைபட்டு
நெஞ்சக் குருதியனை நிலத்திடை வடித்தே
வஞ்சம் அழிக்கின்ற மா..மகம் புரிவம் யாம்
யார்க்கும் குடியல்லோம் யாம் என்பதோர்ந்தனம்
வந்தாரை வாழ வை வம்பிழுத்தா வாளை வை
நெஞ்சில் உரம் கொண்டோம் நேர்மைத் திறன் கொண்டோம்
வஞ்சம் அழிக்கின்ற தாக நாம் திடம் கொண்டோம்
எங்கும் படை கொண்டோம் எதிலும் தடை வென்றோம்
என்றும் ஒளிந்தோடா மாபெரும் மறம் கொண்டோம்
படையே எட்டப்போ பகையை விட்டுப்போ
வெட்டிக்குடை சாய்க்க முன்னர் தப்பிப்போ
கிடைக்குமே ஆணை புறப்படும் தானை
பகை சோர்ந்து பின்னலே அடையுமே வானை
அச்சமோ மடமை அஞ்சாமை உடைமை
வஞ்சம் புரிவோரை அழிப்பதெம் கடமை
இனியும் பொறுமை இல்லை பொறுத்துப் பயனுமில்லை
வந்தாரை வாழ வை வம்பிழுத்தா வாளை வை
விடுதலை விடிவெள்ளி ஒளிர்ந்திடுமே
விரைவிலே விடியலும் பிறந்திடுமே
பகையது படையுடன் தொலைந்திடுமெ
தொலைந்த பின் அமைதியும் எம்வசமே


